பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கை மாநாடு நடத்தப்படுகிறது: பொதுநலவாய செயலகம்..!

611

commonபல்வேறுப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கையில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பொதுநலவாய நாடுகளின் செயலகம் தெரிவித்துள்ளது.

செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உகு இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தீர்மானத்துக்கு முன்னர் பல்வேறு காரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் உகு குறிப்பிட்டுள்ளார். இதில் பொதுநலவாய விழுமியங்களும் அடங்கியிருந்தன.

இதன்போது ஏதாவது குறைகள் இருக்குமாயின் அவற்றை கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகார பேச்சாளர் அநுராதா ஹேரத்,

நேற்று கொழும்பில் இடம்பெறவிருந்த செய்தியாளர் சந்திப்பை கடும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரத்துச் செய்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

பல நாட்டுத்தலைவர்களுடனான சந்திப்பு காரணமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதாக அநுராதா குறிப்பிட்டார்.