இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த மற்றும் ஒரு உடன்படிக்கை!- ஆஸி. பிரதமர் டோனி அபோட்..!

513

tonyஇலங்கையின் படகு அகதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கைக்கு செல்லவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இந்த தகவலை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் இருந்து புறப்படும் அகதிகளின் படகுகளை அவுஸ்திரேலிய கடலுக்கு அப்பால் வைத்து திருப்பியனுப்பும் நடைமுறையை அவுஸ்திரெலியாவும் இலங்கையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் இதற்கு அப்பால் மற்றும் ஒரு உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்ள தாம் முயற்சிப்பதாக டோனி அபோட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.