ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது..!

356

mahபொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை தூதர் கரியவாசம் ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு போராட்டமும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடைபெற்றது.

இந்த போராட்டம் ம.தி.மு.க, திராவிடர் விடுதலை கழகம், தலித் மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் தேச பொதுவுடமை கட்சி, தமிழன் சேவை மையம் சார்பில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பாலசந்திரன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்தனர்.