கிளிநொச்சி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், 34 பெண்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் வண்டியொன்று பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.