பாகிஸ்தானில் கலவரம்: மாணவர்கள் உயிருடன் எரிப்பு..!

499

pakமுஹர்ரம் நாளையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன.

ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர்.

ராஜா பஜார் பகுதியில் உள்ள ஷியா அரபு பாடசாலை (மதரசா) அருகே அவர்கள் வந்த போது பாடசாலையில் இருந்த சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆவேசத்துடன் மதரசாவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர்.



மதரசா மாணவர்கள் சிலரை உயிருடன் தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலில் மட்டும் இரு தரப்பிலும் 10 பேர் பலியாகினர். பொலிசார் உட்பட 35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

ராஜா பஜார் பகுதியில் உள்ள பல கடைகள் சூறையாடப்பட்டன. சில துணி கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.