வவுனியாவில் குளத்தில் மீன் பிடித்த 4பேர் கைது!!

581

வவுனியா பாவற்குளத்தில் இன்று(25.07) அதிகாலை தடை செய்யப்பட்ட தங்கூசி வலையைப்பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை வவுனியா மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு சபையின் உத்தியோத்தர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாவற்குளத்தில் தடை செய்யப்ட்ட தங்கூசி வலையினைப்பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானித்த வவுனியா மாவட்ட தேசிய நீர் உயிரினவளர்ப்பு சபையினர் விஷேட அதிரடிப்படையினருன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாவற்குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏனைய மீனவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவனியா மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு சபையின் உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.