கடை உரிமையாளரை கொன்றுவிட்டு கொள்ளையிட்ட இருவர் கைது..!

713

arrestஹிதோகம பொலிஸ் பிரிவிலுள்ள கடையொன்றில், உரிமையாளரை கொலை செய்துவிட்டு கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10ம் மாதம் 19ம் திகதி இடம்பெற்ற இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன்படி நேற்றையதினம் கிரிமெட்டிய, ஹிதோகம பகுதியில் வைத்து இருவர் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் ஹிதோகம மற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23, 24 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.



சந்தேகநபர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.