வவுனியாவில் இளைஞரொருவர் சிலரால் அழைத்து செல்லப்பட்டு, ஒரு நாள் முழுவதும் கட்டி வைத்து தாக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞரை கடந்த புதன்கிழமை மதியம் சிலர் அழைத்து சென்றுள்ளனர்.
அழைத்து சென்றவர்கள் அந்த இளைஞனை கட்டி வைத்து தாக்கிய பின்னர் மறுநாள் வியாழக்கிழமை மாலை கொக்குவெளி பிரதேசத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
உடல் முழுவதும் காயங்களுடன் உறவினர்களால் மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-தமிழ்வின்-





