2013ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் எது தெரியுமா?

535

404பரபரப்பான இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் குறித்து ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது404 என்ற எண் வழி வார்த்தை தான்.

அதாவது கணனி நெட்வொர்க் செயலிழந்துள்ளது என்பதை குறிக்கும் சொல் தான் இது. இந்த எண் குறிப்பிடப்பட்டால், உடனே இன்டர்நெட் சேவையில் உள்ளவர்கள் உஷாராகி விடுவர்.

இதுபோல, இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் ஃபெயில்(Fail) என்பது. இழப்பு, செயலிழப்பு, தோல்வி என்ற பொருள் கொண்டது.

மூன்றாவதாக ஹாஸ்டாக்(Hashtag),நான்காவதாக @போன்டிபெக்ஸ்(@Pontifex)ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை இரண்டும் பேஸ்புக்,ட்விட்டரில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகம் பயன்பட்ட சொற்கள் சர்விலியன்ஸ்(Surveillance), ட்ரோன்ஸ்(Drones) 6, 7 வது இடத்தை பிடித்துள்ளன.

டெபிசிட்(Deficit) என்பது 8வது இடத்தை பிடித்துள்ளது, நிதி தொடர்பான இன்டர்நெட் பரிமாற்றங்களில் இந்த சொல் பரவலாக வந்துள்ளது.

இதுபோல எலக்ட்ரானிக் உலகில் சிறிய சாதனங்கள், கருவிகளை குறிக்கும் சொல் நானோ(Nano) இது 12வது இடத்தில் உள்ளது. மொபைலில் கூட நானோ சிம் உள்ளது குறிப்பிடத்தக்கது.