வவுனியா விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் !!

757

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – இ.போச. பேருந்து விபத்தில் காயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேற்று பிற்பகல் வைத்தியசாலைக்குச் சென்ற வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பார்வையிட்டு அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.

நேற்று முன்தினம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பரசன்குளம் பகுதியிலிருக்கும் மாணவர்களே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அப்பகுதி மக்களின் தேவையான பரசன்குளத்திற்கு பேருந்துச் சேவையினை மேற்கொள்வதற்கு வன்னிப்பிரந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளருடன் தொடர்புகொண்டு இன்று முதல் அப்பகுதியிலுள்ள மக்களின் வசதி கருதி பேருந்துச் சேவையினை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று முதலாம் திகதி முதல் பரசன்குளம் பகுதிக்கு பேருந்துச் சேவையினை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விபத்தின்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 8 வயதுச் சிறுவனின் இறுதிச்சடங்கினை மேற்கொள்ளும் பொறுப்பை ஓமந்தை அரசர்பதி பொற்பதிஎஸ்.குணரத்தினம் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.