வவுனியாவில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

690

வவுனியாவில் ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று (31.07) வவுனியா மாவட்டத்தில் குற்றம், குற்றவியல் சட்டங்கள் மற்றும் கஞ்சா கடத்தல்களை முறியடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட பொலிசாரை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, விபத்துக்களை தடுப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கும், சமுதாய பொலிஸ் பிரிவினருக்கும், ஏனைய துறையை சேர்ந்தவர்களுக்கும் கெளரவிப்பு வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ, வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவாராச்சி, வவுனியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் அனுராதபுர நுண்கலை மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.