வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் அதிரடி : சிக்கிய தகுதியற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்கள்!!

902

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு நேற்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அங்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீரென்று விஜயம் மேற்கொண்டு இங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்துள்ளார்.

இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் புறம்பான ஆங்கில மருந்து வில்லைகள் சிலவற்றையும் அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.