பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட மூவர் வைத்தியசாலையில் : இருவருக்கு மலேரியா!!

549

chogmபொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரஜைகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உகண்டா நாட்டைச் சேர்ந்த இரு பிரஜைகள் மலேரியா நோய் காரணமாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அரச அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.