வவுனியாவில் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கக்கோரி துண்டுப்பிரசுரங்கள்!!

634

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை இம்மாதம் முதல் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கி உரிமையாளர்கள், ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் அன்றைய தினத்தைக் செலவிடுவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வரும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வரத்தில் ஒரு நாளை குடும்பத்தினருடன் முதலிடுவோம் என்ற தலைப்பில் உள்ள துண்டுப்பிரசுரத்தில், உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க ஒத்துழைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

விஷேட பண்டிகை காலங்களில் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த தினங்கள். நாம் அணைவரும் கடுமையாக உழைப்பது எமது குடும்பத்தினருக்காகவே. எமக்கு அவர்களுடன் கலந்துரையாடி குழந்தைகளுடன் கூடி விளையாடி அவர்கள் எதிர்பார்க்கும் இன்பமாக கூடலை வழங்க போதிய நேராம் கிடைக்கின்றதா? இல்லை என்பதே பலரின் பதிலாக அமைந்துள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து ஞாயிறு தினங்களை விடுமுறை தினமாகப்பிரகண்டனப்படுத்தி எமது குடும்பத்தினருடன் ஒன்றினைந்து இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களின் ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றோம். என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.