வவுனியாவில் சீனிக்கு பதில் யூரியா விற்பனை : சதொச பணியளார்கள் இருவர் பணிநீக்கம்!!

602

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வைக்கப்பட்ட சீனியில் யூரியா கலக்கப்பட்டுள்ள சம்பவத்தினையடுத்து சதொச தலைமை அலுவலகத்தினால் வவுனியா சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளர் மற்றும் யூரியாவை நிலையத்திற்குள் எடுத்து வந்த பணியாளர் ஆகிய இருவரையும் நேற்று பணிநீக்கம் செய்துள்ளதாக வவுனியா சதொச விற்பனை நிலையத் தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளதாக சதொசவில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர்.

இதையடுத்து பொலிசார் சுகாதாப் பரிசோதகர்களின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர். அங்கு சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது சதொச விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது தேவைக்காக யூரியாவைக் கொள்வனவு செய்து வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிறிதொரு பணியாளர் அதனை சீனி என நினைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த சீனியுடன் விற்பனைக்காக கலந்துவைத்துள்ளார். அன்றைய தினம் சீனியைக் கொள்வனவு செய்த நபர் ஒருவர் மாலை நேரம் கொள்வனவு செய்த சீனியை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சீனியில் வித்தியாசம் உள்ளதைத் தெரியப்படுத்தியுள்ளார்.

அனைத்து சீனி மூடைகளையும் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சத ச நிலையத்தில் வைக்கப்பட்ட யூரியாவை தேடியபோது சம்பவம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ச தொச பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவ தினத்தன்று சதொச விற்பனை நிலையத்தால் 114கிலோ கிராம் சீனி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 126 கிலோ கிராம் சீனி பெற்றுக்கொண்ட பொதுமக்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். எனவே பெற்றுக்கொள்ளப்பட்டவற்றிற்கு அதிகமான சீனி திரும்பி வந்துள்ளது. இதையடுத்து இன்று சதொ ச நிலையத்திற்குச் சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் யூரியா இராசாயனம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனியை அங்கிருந்து அகற்றிவருகின்றனர்.