வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

776

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (12.08.2018) மதியம் 11.30 மணியளவில் தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக சூடுவெந்தபுலவு பகுதியில் தரித்து நின்ற சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தனியார் பேரூந்தின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி (23 வயது மதிக்கத்தக்க இளைஞன்) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

-சூடுவெந்தபுலவு தா.மு.சாதிக்-