மாடு மேய்க்கும் ரோபோ..!

670

robotமாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணிக்கின்றன. மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வருகின்றன.

இதற்கான பரிசோதனை முகாம் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நடந்தது. இது விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.