சிம்பு பிறந்தநாளில் வாலு ரிலீஸ்..!

339

simbuசிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் ‘வாலு’. இப்படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் படம் முடிந்தபாடில்லை. சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒத்துழைப்பு தருவதில்லை என செய்திகள் பரவின. இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிடப் போவதாக இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விஜய்சந்தர் கூறும்போது, நானும், சிம்புவும் படத்தை வெளியிட தயாராக உள்ளோம். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் சில பணச்சிக்கல்கள் இருப்பதால் படத்தை வெளியிட முடியாத நிலையில் உள்ளோம்.

இந்த பிரச்சினை இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும். இன்னும் செட் போட்டு எடுக்கவேண்டிய பாடல்களும், வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய பாடல்கள் மட்டும் படமாக்கப்படாமல் உள்ளன. டிசம்பரில் இப்படத்தின் பாடல்களையும், பெப்ரவரி மாதம் சிம்பு பிறந்த நாளில் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘வாலு’ படத்தில் சிம்பு, ஹன்சிகாவுடன் இணைந்து சந்தானமும் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.