ஆஸி. அணியின் வியூகங்களே இந்தியாவை வெல்ல துணை புரியும்..!

375

wi21 ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியாவின் வியூகங்களை கடைப்பிடிக்க போவதாக மேற்கிந்திய அணியின் விக்கட் காப்பாளர் தினேஷ் ராம்டின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2-0 என்ற நிலையில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையிலேயே மேற்கிந்திய அணி ஒரு நாள் தொடரில் கலம் இறங்குகின்றது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் தொடரை 3-2 என்ற அடிப்படையில் இழந்து இருந்தது.

எனினும் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், சமி போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய அணியில் இருப்பதால் அந்த வியூகம் சரிவரலாம் என கிரிக்கட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொலாடுக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதும், வேகப்பந்து வீச்சாளர் ரோச் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதும் மேற்கிந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்