அனாதையாக வீதியில் கிடந்த பெற்றோர்… காரில் உயிருக்கு போராடிய குழந்தை!!

315

அமெரிக்காவில் அளவுக்கதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்ட பெற்றோர் ஒருபுறம் அனாதையாக சாலையில் கிடக்க, மறுபுறம் காருக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Ohio பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி Eric Asher (43) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது ஒரு ஆணும், பெண்ணும் காருக்கு வெளியில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் காரை நிறுத்தி அவர்களின் அருகில் சென்று பார்க்கும்பொழுது, மிதமிஞ்சிய ஹெராயின் எடுத்துக்கொண்டதாலே அவர்கள் மயக்கத்தில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் Eric-ன் காதலி காரின் உள்ளே பின்பகுதியில், ஒரு குழந்தை 31 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து உடனடியாக மீட்டுள்ளார்.

பின்னர் இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட Eric, குழந்தையை காப்பாற்றியதும் முதலில் தண்ணீர் கொடுத்தோம் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் வைரலாக பரவினாலும் அவருக்கு எதிராக பலரும், ஏன் இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டீர்கள் என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த Eric, இதனை விழிப்புணர்விற்காக மட்டுமே பதிவிட்டோம். இந்த சம்பவத்திற்கு பின்னர் குழந்தையின் உயிரை காப்பாற்றியதாக அவருடைய தாய் போன் செய்து எங்களுக்கு நன்றி தெரிவித்தார் என பதிலளித்துள்ளார்.