கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளம் : 324 பேர் பலி!!

643

திருவனந்தபுரம் – கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 324 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

223,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். மேலும், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்து வருவதால் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.