2014ஆம் ஆண்டுக்களான ஐ.பி.எல். இலங்கையில் நடத்தப்படுமா?

369

iplஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்த போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடப்பது வழக்கம்.

அடுத்த ஆண்டுக்கான (2014) 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து ஆலோசனை செய்ய ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் தலைமையில் மும்பையில் நடந்தது.

புனே வாரியர்ஸ் அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு போட்டியில் 8 அணிகள் மோதும் என்று தெரிகிறது.

இந்த போட்டியில் மாலை நேரத்தில் நடைபெறும் ஆட்டங்களை குறைக்கலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இரவில் நடந்தால் அதிக ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதாலும், கோடைக்காலத்தில் மாலை நேரத்தில் வீரர்கள் விளையாடுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறும் காலத்தில் இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது.

இதனால் பாதுகாப்பு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றலாமா? என்பது குறித்தும் ஐ.பி.எல்.நிர்வாக குழுவினர் விவாதித்தனர்.

இந்த விஷயத்தில் தேர்தல் திகதி அறிவிப்பு வெளியான பிறகே இறுதி முடிவு செய்யப்படும்.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்பட்டால் ஐ.பி.எல். போட்டி 2009-ம் ஆண்டை போல் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அல்லது மலேசியாவில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.