காணமல் போன ஆசிரியரை மீட்க கோரி வவுனியா தெற்கு வலய கல்வி நிலையத்தின் முன் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்!!(படங்கள்)

660

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா அல்ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியரான கார்த்திகேசு நிரூபன் அவர்களை மீட்டு தருமாறு கோரி வவுனியா தெற்கு வலய கல்வி நிலையத்தின் முன் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.

கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த ஆசிரியர் காணமல் போயுள்ளார் இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையம்,வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலகம் மனித உரிமை உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் கிடைக்காத நிலையில் காணமல் போனவர்களின் பெற்றோர்கள் சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவருக்கு என்ன நடந்தது என்பதை அறியும் முகமாகவும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறும் வலியுறுத்தியும் கல்வி சமூகம் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இப்போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண சபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன் முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன் இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அல்ஹாமிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் இலங்கை ஆசிரிய சங்க உறுப்பினர்கள் காணமல் போனவரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று வவுனியா மாவட்ட இலங்கை மனித உரிமைகள் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

11 12 13 14