சிம்பு – நயன்தாரா ஜோடியை சேர்த்த பாலிவுட் காதல்..!

339

simbuசிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்ததற்கு பிரபலமான முன்னாள் பாலிவுட் ஜோடியே காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.

மீண்டும் இணையும் சிம்பு, நயன்தாரா ஜோடி குறித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் இன்னும் ஆச்சர்யம் தீரவில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்புவுடன், நயன்தாரா ஜோடியாக நடிக்க சம்மதித்திருப்பதை இயக்குனர் எப்படி சாதித்தார் என்றால் அது ஒரு பெரிய கதை.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றாலும் முக்கியமான ‘மயிலா’ என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

பாண்டிராஜ் சொன்ன கதையும், இந்த கதாபாத்திரமும் நயனுக்கு பிடித்துப்போனாலும் சிம்பு ஹீரோ என்றதும் முதலில் தயங்கியிருக்கிறார்.

ஆனால் பாண்டிராஜோ பாலிவுட் நட்சத்திரங்களான் ரன்பீர்கபூரும், தீபிகா படுகோனேவும் தங்களது காதல் முறிவுக்குப்பின்னும் கூட இணைந்து நடித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதனை தொழில் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அங்கே வேறு சலனங்களுக்கு வாய்ப்பே இல்லை என்றும் எடுத்துக்கூற, அவர் அளித்த நம்பிக்கையில் சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா.