ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ரன்களை கடந்து கோலி சாதனை..!

308

kohliஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை எட்டினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொச்சியில் இன்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்களைக் கடந்தார் விராட் கோலி. இதன்மூலம் 120 போட்டிகளில் விளையாடிய கோலி (114 இன்னிங்ஸ்) 5005 ரன்கள் அடித்துள்ளார். இதில் 17 சதம், 27 அரை சதம் அடங்கும்.

இதன்மூலம் விரைவில் 5000 ரன்களைக் கடந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரிர்ச்சர்ட்சின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். ரிச்சர்ட்சும் 114 இன்னிங்சில் விளையாடி 1987ம் ஆண்டு 5000 ரன்னைக் கடந்தார். ஆனால் அவர் 126-வது போட்டியில் இந்த இலக்கை எட்டினார்.

இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் கங்குலி 131 போட்டிகள், 126 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது