குளிர்சாதனப் பெட்டிகளை படகாக்கி மீன்பிடிக்கும் மக்கள்!!(படங்கள்)

555

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலால் தங்களது படகுகள் உட்பட அனைத்து உடைமைகளையும் இழந்த மீனவர்கள், குளிர்சாதன பெட்டிகளை படகுகளாக பயன்படுத்தி மீன் பிடித்துவருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கிய ஹையான் புயலால் அங்கு பலத்த உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உண்ண போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் போராடும் அங்குள்ள மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு தரும் நிவாரணங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தால் உயிர் வாழ இயலாது எனக் கருதிய அங்குள்ள மீனவர்கள் புயலால் உருக்குலைந்து போன தங்களது படகுகளுக்கு மாற்றாக பழைய குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

புயலில் சிக்கி வீதிகளில் உடைந்து கிடந்த குளிர்சாதனப் பெட்டிகளின் இருபுறமும் நீண்ட தடிகளை கட்டியபடி, படகுகள் போல பயன்படுத்தி அவற்றின் உதவியுடன் மீன்பிடித்து வருகின்றனர்.

இதனை முதல்முறை பயன்படுத்திய 52 வயதான ஜிம்மி ஓபால்டோ கூரியப்போது, இந்த யோசனை எனது மகன், குளிர் சாதனப்பெட்டியை வைத்து விளையாட அனுமதி கேட்டபோது தோன்றியது.

இந்த படகுகளால் கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்ற போதும் அதன்மூலம் கிடைக்கின்ற மீன்கள் தற்போதைக்குப் போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

fridge