இது ஆரம்பம் தான் சாதனைகள் தேடி வரும் : விராத் கோலி!!

303

virathமேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தது பெருமையாக உள்ளது என இந்திய அணியின் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

கொச்சியில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி 86 ஓட்டங்கள் அடித்து கைகொடுக்க இந்திய அணி சுலபமாக வென்றது.

இப்போட்டியில் கோலி 81 ஓட்டங்கள் எடுத்தபோது குறைந்த இன்னிங்சில் 5000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின்(114 இன்னிங்ஸ்) சாதனையை சமன் செய்தார்.

இதுகுறித்து கோலி கூறுகையில் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் சாதனைகளை கருத்தில் கொண்டு விளையாட மாட்டேன். சிறப்பாக விளையாடுவதே முக்கியம் அப்போது சாதனை நம்மை தேடிவரும்.

என்னை பொறுத்தவரை இது ஆரம்பம் தான் இன்னும் நீண்ட கிரிக்கெட் பயணம் உள்ளது. கொச்சி மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்து ஆடுவதற்கும் இரண்டாவதாக துடுப்பெடுத்து ஆடுவதற்கும் பெரும் வித்தியாசம் இருந்தது.

இத்தொடர் தென் ஆபிரிக்காவில் நடக்கவுள்ள தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.