வேலையில்லா விட்டால் விரைவில் முதிர்ச்சியடையும் ஆண்கள்!!

440

maleநமது உடலில் உள்ள 23 சோடி குரோமோசோம்களில் தான் நமது பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கும் மரபணு உள்ளது. இதனை பாதுகாக்கும் வகையில், குரோமோசோம்களின், முனைகளில், டீலோமர் என்ற பகுதி உள்ளது. மனிதனுக்கு வயது ஆக ஆக இந்த டீலோமரின் நீளம் குறைந்து கொண்டே வரும்.

லண்டன் மற்றும் பின்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 1966ம் ஆண்டில் பிறந்த 5620 பேரை (ஆண்கள் + பெண்கள்) தங்களது ஆய்விற்கு எடுத்துக் கொண்டனர். இவர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன .

இதில் 2ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு செல்லாத ஆண்களிடத்தில் வாழ்நாளை நிர்ணயிக்கும் டீலோமரின் நீளம் மிக குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பெண்களிடத்தில் இந்த வித்தியாசம் காணப்படவில்லை.

வேலையில்லாத ஆண்கள் சமூக காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதால் அவர்கள் விரைவில் முதிர்ச்சியடைந்து, துரித மரணத்திற்கும் அவர்கள் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.