100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி : மூவர் படுகாயம்!!

562

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை நகர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நாகசேனையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.