மாணவியின் உடையை கழட்ட சொன்ன ஆசிரியர் : சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ!!

646

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அந்த மாணவி அடம்பிடித்த நிலையில் பெற்றோரிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோரும், உறவினரும் அவர் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் இருந்த ஆசிரியர் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.