வவுனியாவில் வீதியிலுள்ள கால்நடைகளை அகற்ற நடவடிக்கை : தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் ரவி!!

470

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்துள்ளார்.

வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் வீதிகளில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகள் தரித்து நிற்பதால் வாகனங்கள் பயணிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. இவ் விடயம் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைவிடப்பட்டுள்ள கட்டாக்காலி கால்நடைகளை உரிமையாளர்கள் தமது வீடுகளில் கட்டிவைத்து பராமரிப்பதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தொடர்பாக எனது கனவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து எமது பிரதேச சபையினூடாக வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.