வவுனியாவில் மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக1000 ரூபாவை வழங்க கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

545

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (29.10.2018) காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை நாட்டின் மிக முக்கிய பொருளாதாரமாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருவது பெருந்தோட்டத்தின் தேயிலை ஏற்றுமதி பொருளாதாரம் ஆகும். இப் பெருளாதாரம் நாட்டிற்கு பெரியளவிலான அந்நியச் செலவாணியை பெற்றுத்தருகின்றது.

ஆனால் தேயிலைக் கொழுந்துகளை பறிக்கின்ற இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்ந்தும் தோட்டக் கம்பனிகளாலும் மலையக பிற்போக்கு அரசியல் தலமைகளினாலும் ஏமாற்றப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ள.

இன்றைய சூழலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி தொடர்ந்து வீதிப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் அப்போராட்த்தை தோட்டக் கம்பனிகள் சற்றுக்கூட கவனத்தில் எடுக்காத நிலைமையே தொடர்ந்து வருகின்றது. ஆனால் அத் தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாயினை வலியுருத்தி போராடி வருகின்றனர்.

இன்றைய காலத்தில் வாழ்க்கைச்செலவு அதிகரித்து காணப்படுகின்றது. அவர்களின் கோரிக்கை நியாயமானது அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இம் மனிதச் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.