மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய ரஸ்ய பிரஜை மரணம்!!

536

rasஹிக்கடுவை கடற்பரப்பில் குளித்தவேளை நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ரஸ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி காலை கடற்பரப்புக்கு குளிக்கச் சென்றவேளை இந்நபர் நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் கடலில் இருந்தவர்கள் அந்நபரை காப்பாற்றி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்தநிலையில் ரஸ்ய பிரஜை நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். ஒலேல் லொமானின் என்ற 41 வயது ரஸ்ய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.