சூர்யாவின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிகள்..!

319

suryaநடிகர் சிவகுமார் நீண்டகாலமாகவே பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வந்தார். அதை இப்போது அவரது மகன் சூர்யா இன்னும் விரிவுபடுத்தி அதிகமான ஏழை மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்.

அதற்காக அகரம் பவுண்டேசனை தொடங்கி அதை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு யுனிவர்சிட்டி சார்பில் உலகமெங்கும் நடத்தப்பட்டு வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கிளை தற்போது தமிழ்நாடு, ஆந்திராவிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு அனிமேஷன் சிடி தயாரித்திருக்கிறார்கள். நடிகர்-நடிககளின் படத்தைக்கொண்டு அதை சொன்னால் எளிதில் மக்களிடம் சென்றடையும் என்பதால், சூர்யா,சித்தார்த், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோரை அந்த அனிமேஷன் படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு, சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகள் அதற்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பில் தற்போது தன்னை தூதுவராக இணைத்துக்கொண்டுள்ளார் சூர்யா. எய்ட்ஸ் என்ற இந்த அபாயகரமான நோய் பற்றிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூக பணியினை ஆற்றுவதில் என்னை இணைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ள சூர்யா, இந்த சமூகப்பணியை மிகச்சிறப்பாகவே செய்வேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.