ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியானதல்ல – நாராயணசாமி..!

922

narayanaஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியானதல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் திடீரென்று மாற்றுக் கருத்துக்களை கூறிவருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒரு கருத்தும் ஓய்வுபெற்ற பின்னர் வேறு விதமாகவும் முரணான வகையில் கருத்து வெளியிடுவது சரியானதல்ல.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முழுவதும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மறுவிசாரணை கோருவது சரியானதல்ல – என்றார்.