நாடாளுமன்றம் நாளை கூடுகின்றது?

273

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற வாளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால் தடையுத்தரவு பிறப்பித்து இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.