தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது!!

248

நாடாளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொது தேர்தல் குறித்து இரண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.