மலம் கழிக்க சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள் : கதறும் தாய்!!

493

மாணவியை சீரழித்த இளைஞர்கள்

தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து பரிதாபமாக இறந்த நிலையில், அவரின் மருத்துவ அறிக்கையில் மன அழுத்தம் காரணமாக மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் இறந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்மபுரி சிட்லிங் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, மலர் தம்பதியரின் மகள் செளமியா(17). இவரது வீட்டில் கழிப்பறை இல்லை. இந்நிலையில் மாணவி செளமியா கடந்த நவம்பர் 5-ஆம் திகதி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினர் சதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஆனாலும், பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்றுதான் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறந்த மாணவி செளமியா பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், ஆனால் சாதாரணமாக செக்அப் செய்துவிட்டு, தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு சௌமியாவை வெளிநோயாளிகளுக்கான வார்டில் செக்கப் செய்துவிட்டு, மறுநாள் வருமாறு கூறியுள்ளனர். இப்படி அங்கும் இங்குமா அலையவிட்டதால், உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட செளமியா இறுதியாக அங்கிருக்கும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை, இப்படி கடைசி வரை சாதரண சிகிச்சை அளிக்கப்பட்டதால், செளமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின் வந்த அவருடைய மருத்துவ அறிக்கையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால், மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் செளமியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சௌமியாவின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறிய பின்னரே அவர்கள் சென்றனர்.

செளமியாவை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரில் ரமேஷ் என்பவர் சாராய வியாபாரியின் மகன் என்று கூறப்படுகிறது. இதனால் அவனை காப்பாற்றவே சௌமியாவின் புகாரை பதிவுசெய்யாமல் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்போது பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்று மட்டுமே எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதை பாலியல் வன்கொடுமை என்று மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் உண்மை அறியும் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமயந்தி கூறியுள்ளார்.

அதன் பின் இது குறித்து செளமியாவின் தாய் மலர், என் பொண்ணு நல்லா படிப்பாள், அவளுக்கு நல்ல படியாக படித்து பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் இப்படி அவள அநியாயமா கொன்னுட்டாங்களே, என் மகள் சாவுக்கு பொலிசும் காரணம் என்று கதறி அழுதுள்ளார்.