விஜய் சேதுபதிக்கு செல்யூட் அடித்த கேயார்..!

313

vijaySethupathiவடபழனி பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்த ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கேயார், நடிகர் விஜய் சேதுபதி எந்த தயாரிப்பாளரையும் நஷ்டப்படுத்த மாட்டேன். அவர்கள் மன வருத்தம் கொள்ளும்படியான விஷயங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். விஜய் சேதுபதி அதுமாதிரி செயல்படுகிறார். மற்ற நடிகர்களும் இது மாதிரி செயல்பட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

‘மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா’ பக்தி படம். இதுமாதிரி படங்கள் வெற்றி பெறவேண்டும் என்றார். இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை என்ற குறை உள்ளது. ஆண்களை கவர குத்துப்பாட்டு, சாராயபாட்டு என வைக்கிறோம். அதுபோல் பெண்களை கவர பக்தி படங்களும், பக்தி பாடல்களும் வரவேண்டும் என்றார்.

விஜய் சேதுபதி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.சிவா, டைரக்டர்கள் டி.பி.கஜேந்திரன், சந்திர கன்னையன் படத்தில் நடித்த மகி, சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா ஆகியோரும் பேசினர்.