ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு..!

291

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது.

முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் திகதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் இறுதி பிரிண்ட் தயார் செய்யும் பணிக்காக சவுந்தர்யா வெளிநாடு சென்றிருப்பதால், மேலும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது இசை வெளியீடு.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பாடல்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இதில் தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியே தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போதுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்.

இதற்காக நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்ததோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், திரைத் துறையினர், பொதுப் பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதிச் சீட்டுகள் தயாராகி வருகின்றன.

டிசம்பர் 25-ம் திகதி கிறிஸ்துமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.