வவுனியாவில் மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியர்!!

1880

fireமாணவர்களிடம் இருந்து உண்மையை வரவைப்பதற்காக வகுப்பாசிரியர் ஒருவர் 19 மாணவர்களின் கையில் கற்பூம் கொழுத்திய சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை வவுனியா சுந்தரபுரம் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறை மேசையில் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய கடிதம் ஒன்று இருந்துள்ளது. இதனை வகுப்பாசிரியர் எடுத்து வாசித்ததும் அதிர்ந்து போயுள்ளார்.

தனது வகுப்பு மாணவர்களிடம் இக் கடிதம் யாரால் எழுதப்பட்டது என கேட்ட போது மாணவர்கள் நாங்கள் எழுதவில்லை. இது பற்றி எமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் 19 பேரினது கையிலும் கற்பூரத்தை கொழுத்தி சத்தியம் செய்யுமாறு பணித்து மாணவர்களின் உள்ளங்கைகளில் கற்பூரத்தை கொழுத்தியுள்ளார்.

கற்பூரம் கொழுத்தப்பட்டதன் காரணமாக நான்கு மாணவர்களின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய 15 மாணவர்களின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் பாடசாலையுடன் முரண்பட்ட போதும் பாடசாலை அதிபர் அதனை சமரசம் செய்து வைத்துள்ளார்.

எனினும் வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.