1500 தடவைகள் சிறைக்குச் சென்ற அமெரிக்கர்!!

285

Henry-earlஅமெரிக்காவில் வசிக்கும் ஹென்றி எர்த்(64)என்பவர் கைது மற்றும் ஜெயிலில் அடைபட்டு கிடப்பதில் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறார். இதுவரையில் அவர் 1500 இற்கும் மேற்பட்ட தடவைகள் கைதாகி சிறைக்கு சென்று விட்டார். அதாவது அவர் தனது 20வது வயதில் 1970ம் ஆண்டு ஜூலை மாதம் அபாயகர ஆயுதம் வைத்திருந்ததாக பிடிபட்டு முதல் தடவை ஜெயிலுக்கு சென்றார்.

அடுத்த 10 ஆண்டில் அவரது ஜெயில் விஜயம் 230 தடவையை எட்டிப்பிடித்தது. அப்படி இவர் செய்த குற்றம் தான் என்ன என்றால் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடப்பது மற்றும் அளவுக்கு மீறிய குடிபோதை ஆகியவையே காரணம் ஆகும்.

இதனால் நீதிபதிகள் அவருக்கு 2 மாதம் அல்லது 3 மாதம் என தண்டனை கொடுத்தார்கள். ஆனாலும் அவர் இன்னும் திருந்தியபாடில்லை. சமீபத்தில் அவர் தனது 64வது பிறந்த நாளைக் கூட ஜெயிலிலேயே கொண்டாடினார். குடும்பம் சகிதமாக அமெரிக்கர்கள் கொண்டாடி மகிழும் நன்றி தெரிவிக்கும் மூன்று விழாவையும் அவர் ஜெயிலில் நண்பர்களுடனே கழித்தார்.