வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா!!

737

scholarships

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இந்த வருடம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராசா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக த.சந்திரமோகன் (உதவி தவிசாளர் – செட்டிகுளம் பிரதேச சபை), என்.கமலதாசன்( பிரதேச செயலாளர் -செட்டிகுளம்) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.