கிளிநொச்சி மாவட்டம் வெள்ளத்தில் முழ்கியது : தொடரும் அவலம்!!

312

கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உத்தியோகத்தர்களை மீட்டுள்ளனர்.

அதே வேளை தர்மபுரம் வைத்தியசாலைகுள்ளும் நீர்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தரவுகளை சேகரிக்கும் பணிகளில் மட்டுமே இடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது எனவும் மீட்புப் பணிகளில் இராணுவம், பொலிஸார், கடற்படை மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதுடன் ஆபத்தில் உள்ளவர்கள் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவை தொடர்பு கொள்ள கூடியவாறு எவ்வித தொடர்பு இலக்கங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகவியாளர்கள் தரவுகளை வழங்குவதற்கு அதாவது பெரும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு வழங்க முயற்சித்தாலும் அவர்களை உரிய நேரங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களுக்காக அத்தியாவசிய பொருட்டாகக் கூட உணவுகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனைப் பகுதியில் பலரது வீடுகளுக்குள் வெள்ளம் சென்றமையால் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து பொது மண்டபம் ஒன்றில் உள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல் அதிகாரிகள் பலருக்கு வழங்கப்பட்டும் காலையில் இருந்து இதுவரை அவர்களுக்கான உணவு கூட வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.