2 வயதில் மகள் மீது அசிட் வீசிய அப்பா : தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

564

 

மகள் மீது அசிட் வீசிய அப்பா

இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர் இரண்டு வயது இருக்கும் போது இவருடைய தாய் மற்றும் இவர் மீது தந்தை ஆசிட் வீசியதால், பலத்த தீக்காயம் அடைந்தார்.

ஆனால் அவரது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு வயதில் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பெண் இப்போது எப்படி இருக்கிறார் என்பது பற்றி பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் Anmol Rodrigous-க்கு தற்போது 23 வயது ஆகிறது எனவும், தனியாக இருக்கும் இவர் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது என குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் உலகின் சந்தோஷமான பெண் நான் தான் என்றும் அவர் கூறிக் கொள்கிறார். இவர் NGO Acid Survivor Sahas Foundation ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றி உதவி செய்து வருகிறார்.

இவர் இதுவரை 20 பெண்களுக்கு உதவி செய்துள்ளதாகவும், அதில் மிகவும் கஷ்டப்பட்ட தன்னுடைய நண்பர் ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய வாழ்க்கையை விரும்புகிறேன். நான் வித்தியாசமாக இருக்கிறேன். ஒற்றை கண், எரிந்த தோல் இருப்பினும் நான் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்.

என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது, நான் இரண்டு வயதில் இருக்கும் போது இந்த சம்பவம் நடந்தது, இதற்காக நான் பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தேன், ஆனால் என் அம்மா இறந்துவிட்டாள். அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். நான் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் இருக்கிறேன், என் முகத்தை பார்க்கும் போது பயம் இருக்கலாம். கல்லூரி படிப்பை நன்றாக முடித்தேன்.

ஆனால் கல்லூரியில் எனக்கு ஒரு நண்பர்கள் கூட கிடையாது. தனியாகவே சாப்பிடுவேன். யாரும் என்னிடம் பேசமாட்டார்கள். நான் என் அம்மா உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன், ஒரு நண்பர் என் மீது அன்போடு இருந்தால் போதும், அது தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் Anmol-க்கு பெண் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலருடன் நண்பராக உள்ளார். இதுவரை யார் ஒதுக்கினாலும், இவர் அவர்கள் மூலம் மற்ற பெண்களுக்கு வேலை வாங்கு தருவதாக கூறப்படுகிறது.

ஆசிட் வீசிவிட்டால் அவ்வளவு தான் வாழ்க்கை என்று நினைக்கும் என்று பெண்களுக்கு மத்தியில் ஒரு தன்னம்பிக்கையின் உருவமாக Anmol இருப்பது பல பெண்களுக்கு மட்டுமல்ல தன்னம்பிக்கை இழந்து நிற்கும் அனைவருக்கும் ஒரு உதாரணம் தான்.