கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை..!

623

weநாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சில சமயங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்கள், மீனவர்கள், கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுவது பாதுகாப்பானதாகும்.