தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் நெல்சன் மண்டேலா காலமானார்..!

372

nelsonதென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் இவர் திகழ்ந்தார்.