இறுதி யுத்த காலத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சியில், மக்களின் சுகாதார நிலையானது மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளதையிட்டு, பலரின் கோரிக்கைகளுக்கு அமைவாக மூன்று சேவை மையங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது கடந்த 3ம் திகதி இடம்பெற்றது.
இதன்பிரகாரம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட மாற்றுவலு அவைய தயாரிப்பு நிலையம், பரந்தன் ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டிடம்,
பளையில் 71 மில்லியன் ரூபா செலவில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட விடுதி வசதிகளைக் கொண்ட பிரதேச வைத்தியசாலை என்பனவே திறந்து வைக்கப்பட்டனவாகும்.






