ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பேர் : தோழியின் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம்!!

356

 

பரிதாப சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோழியின் கண்முன்னே இரண்டு நண்பர்களும் சுனையில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி-அறிவியல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடன் அதே பிரிவில் பயிலும் சுவேதா(19) மற்றும் வேறு ஒரு மாணவி என 3 பெரும் சேர்ந்து, நேற்று கல்லூரியை கட்டடித்துவிட்டு செஞ்சி அருகே பனமலை கிராமத்தின் மலை உச்சி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சுவாமி தரிசனம் முடிந்த பின்னர், கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சுனை கரையோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த பாசியில் கால் தடுமாறி சுவேதா சுனையில் சிக்கியுள்ளார். நீச்சல் தெரியாமல் சுவேதா திணறுவதை பார்த்த சுந்தர்ராஜ் வேகமாக தண்ணீருக்குள் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால் நீருக்குள் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த மற்றொரு தோழி என்ன செய்வதென தெரியாமல் அதிர்ச்சியில் சுனையில் குதித்துள்ளார். ஆனால் அவரையும் சுனை மூழ்கடிக்க முயன்றதால், அங்கிருந்த கல்லை பிடித்து கொண்டு உதவி கேட்டு கூச்சலிடம் ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு கோவிலில் இருந்து ஓடிவந்த பொதுமக்கள் வேகமாக அந்த பெண்ணை மீட்டெடுத்தார். அதன் பிறகு அந்த மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆற்றில் மூழ்கிய சுந்தர்ராஜ் மற்றும் அவருடைய தோழி சுவேதாவை சடலமாக மீட்டெடுத்தனர்.

இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.