மன்டேலாவின் மறைவு குறித்து ஜனாதிபதி கவலை!!

1004

Mahindaதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மன்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கவலை தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவிற்கு அனுதாப செய்தியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய தென்னாபிரிக்காவின் தந்தையான நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து தென்னாபிரிக்க குடியரவு மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாக பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.